காஷ்மீர்: தீவிரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லா அருகே தீவிரவாதிகளை சுற்றி வளைத்துள்ள பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது சரமாரியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லா அருகே உள்ள உரி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இதனையடுத்து, இன்று காலை அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர்.

அப்போது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து கடுமையாக தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு இதே உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com