புல்வாமா என்கவுண்டர்
புல்வாமா என்கவுண்டர்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை, பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்பு படை, பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மார்வால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து உள்ளூர் போலீசாருடன் பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு படையினரைக் கண்டதும் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர்களை நோக்கி பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com