புல்வாமாவாவில் பதுங்கியிருந்த பயங்கரவாதியை சுட்டுக்கொன்றது ராணுவம்

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
புல்வாமாவில் பாதுகாப்புப் படைகள் அதிரடி தாக்குதல் (மாதிரிப்படம்)
புல்வாமாவில் பாதுகாப்புப் படைகள் அதிரடி தாக்குதல் (மாதிரிப்படம்)
Published on

ஸ்ரீநகர்:

ஜம்முகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அப்பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர், அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மற்ற பயங்கரவாதிகள், தாக்குதலுக்கு பதிலடி தர இயலாமல் தப்பியோடினர். 

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் மற்றும் எந்த இயக்கத்தை சேர்ந்தவன் போன்ற தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com