ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை, பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை, பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குல்காம் மாவட்டத்தில் கட்வானி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்களை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com