ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்த வீரரை மீட்கும் ராணுவத்தினர்
காயமடைந்த வீரரை மீட்கும் ராணுவத்தினர்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தின் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத்தொடங்கினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார் என முதல்கட்ட தகவல் வெளியானது.

தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com