

ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள தான்ரிபோரா பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் இன்று காலை அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் சரமாரியாக சுட்டனர். இந்த என்கவுண்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.