உயிர்களை காக்கும் ஆம்புலன்ஸ் மோதி இருவர் பலி

மேற்கு வங்காளம் மாநிலத்தில் காலியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் மோதிய விபத்தில் இன்று இருவர் பலியாகினர்.
உயிர்களை காக்கும் ஆம்புலன்ஸ் மோதி இருவர் பலி
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உயிருக்கு போராடிய நோயாளியை கொல்கத்தா நகருக்கு ஏற்றிச் சென்ற ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் ஆஸ்பத்திரியில் இருந்து நாடியா மாவட்டம் வழியாக திரும்பி வந்து கொண்டிருந்ந்தது.

இங்குள்ள கட்டாலியா - கரிம்பூர் சாலை வழியாக வந்தபோது இன்று அதிலாலை டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலை ஓரத்தில் இருந்த மின்சார கம்பத்தில் மோதியது. இதனால், மேலும் நிலைகுலைந்து அருகாமையில் நின்றிருந்த இருவரை மோதி தள்ளியது.

இந்த விபத்தில் அந்த பகுதியை சேர்ந்த ரமேன் பைராக்யா, தனஞ்சய் மால்லிக் ஆகியோர் உயிர்ழந்தனர். இவ்விபத்து தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com