

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ்வரன் (45). இவர் கூலித்தொழிலாளி. இவருக்கு கல்பனா (34) என்ற மனைவியும், சூர்யா (17), எஸ்வன்குமார் (15) என்று 2 மகன்களும் இருக்கின்றனர்.
இவருடைய மகன்கள் 2 பேரும் தொட்டியம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் படித்து வந்தனர். இவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் ஊர் சுற்றிதிரிந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மனமுடைந்த மாதேஷ்வரன் அடிக்கடி கல்பனாவிடம் கூறியுள்ளார்.
இதனால் வாழ்வில் விரக்தி அடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்பனா மற்றும் அவரது மகன்கள் வேளியே சென்று விட்டு வந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கதறி அழுதனர்.
மேலும் இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த மாதேஷ்வரனின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.