மாதவரத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏறிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

மாதவரத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுதை சரி செய்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மாதவரம்:

வியாசர்பாடி சி.கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் மாதவரத்தை அடுத்த மாத்தூர் மின் வாரியத்தில் மின் அலுவலகத்தில் களப்பணி உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இவர் இன்று மாத்தூர் 2-வது மெயின் ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுதை சரிது செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது.

இதில் அவர் டிரான்ஸ்பார்மரிலேயே தொங்கிய நிலையில் மயங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வந்து முருகனை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com