ஆழ்வார்குறிச்சி அருகே தொழிலாளி மரணம்

ஆழ்வார்குறிச்சி அருகே மாமரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆழ்வார்குறிச்சி அருகே தொழிலாளி மரணம்
Published on

கடையம்:

கடையம் அடுத்த ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள ஏ.பி. நாடானூரை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது38). இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள மாமரத்தில் ஏறினார்.

அப்போது அவர் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த சிவலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com