தொண்டியில் துணிப்பைகளை பயன்படுத்த பொதுமக்களிடம் வலியுறுத்தல்

தொண்டியில் துணிப்பையை பயன்படுத்த பொது மக்களிடம் பேரூராட்சி பணியாளர்கள் வலியுறுத்தினர்.
தொண்டியில் துணிப்பைகளை பயன்படுத்த பொதுமக்களிடம் வலியுறுத்தல்
Published on

தொண்டி:

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பேரூராட்சிப்பகுதியில் சுற்றுச்சூழலைபாதுகாக்கும் வகையில் தமிழகஅரசின் உத்தரவுப்படி பாலித்தீன் பைகளை முற்றிலும் ஒழித்து எளிதில் மக்கும் துணிப்பைகளை பயன்படுத்த பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி தலைமையில் கடை வீதிகளில் பொதுமக்களிடம் வலியுறுத்தினர்.

பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் முத்துச்சாமி உட்பட பலர் கடை வீதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். பாலித்தீன், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடைகளை சோதனையிட்டு பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் அபராதம் விதித்தனர். இதனால் தொண்டி பகுதியில் பெரும்பாலான கடைக்காரர்கள் பொருட்கள் வாங்க வரும் பொது மக்களிடம் வரும்போது துணிப்பை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com