கோத்தகிரி பகுதியில் மரம் வெட்டுவதை தடுக்க வலியுறுத்தல்

கோத்தகிரி பகுதியில் மர்ம நபர்கள் மரம் வெட்டி கடத்துவதை தடுக்க கோரி வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி பகுதியில் மரம் வெட்டுவதை தடுக்க வலியுறுத்தல்
Published on

கோத்தகிரி:

கோத்தகிரி அரவேனு அருகிலுள்ள ஜக்கனாரை மற்றும் பனகுடிசோலை பகுதிகளில் நாவல் மரங்களை வெட்டி கடத்துவதை குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜக்கனாரை மற்றும் பனகுடி சோலை பகுதிகளில் பல இடங்களில் நாவல் மரங்கள், சீகை மரங்கள் கற்பூரம் மரங்கள் உள்ளிட்ட மர வகைகளை மர்ம நபர்கள் இரவோடு இரவாக வெட்டி கடத்தி வருகிறார்கள்.இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் வனத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என ஊர் பொதுமக்கள் வன உயிரின மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மேலும் கோத்தகிரி நகர பகுதிகளில் அதிகாலை 6 மணிமுதல் 8 மணிவரை வனப்பகுதிகளில் இருந்து வெட்டிக் கடத்தி வரும் மரங்களை வனக் கொள்ளையர்கள் வனத்துறை உதவியுடன் கொண்டு சென்று விற்பனை செய்து வருவதாகவும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் குற்றம் காட்டுகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com