புற்றுநோய் பாதித்த என் தாய்க்காக சுஷில் குமாரை வீழ்த்துவேன்: ராணா சபதம்

புற்றுநோய் பாதித்த என் தாய்க்காக புரோ மல்யுத்த லீக் போட்டியில் சுஷில் குமாரை வீழ்த்துவேன் என, அவரிடம் சமீபத்தில் தோல்வி அடைந்த பிரவீன் ராணா சபதம் செய்துள்ளார்.
புற்றுநோய் பாதித்த என் தாய்க்காக சுஷில் குமாரை வீழ்த்துவேன்: ராணா சபதம்
Published on

புதுடெல்லி:

காமன்வெல்த் போட்டிகளுக்கன தகுதிச்சுற்று போட்டி சமீபத்தில் டெல்லியில் நடந்தது. அப்போது மல்யுத்த பிரிவு அரையிறுதியில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமாரும், பிரவீன் ராணாவும் மோதினர். இப்போட்டியில் சுஷில் குமார் வெற்றி பெற்று, காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இந்த போட்டி முடிந்ததும் இருவரின் ரசிகர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ராணாவின் சகோதரர் தாக்கப்பட்டார். தன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், பிரவீன் ராணா வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் புரோ மல்யுத்த லீக் போட்டியில் சுஷில் குமாரை தோற்கடிப்பேன் என சபதம் செய்துள்ளார்.

“என் தாய் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். புற்று நோயானது மூன்றாம் நிலையில் உள்ளது. இந்த வேதனையைவிட, நான் தாக்கப்பட்டது குறித்து கேள்விப்பட்டபோது அதிக வேதனை அடைந்தார். இதை மனதில் கொண்டு வரும் புரோ மல்யுத்த லீக் தொடரில் களமிறங்கி சுஷில் குமாரை வீழ்த்துவேன்” என்கிறார் ராணா.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com