

பிரேசில் நாட்டின் பாரா மாநிலம், பெலம் நகரில் உள்ள ஒரு மது பாரில் நேற்று மாலை வாடிக்கையாளர்கள் பலர் உற்சாகமாக மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்தபடி ஒரு பைக் மற்றும் 3 கார்களில் வந்த நபர்கள், பாருக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
சிறிது நேரம் துப்பாக்கியால் சுட்ட அந்த நபர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த கொடூர தாக்குதலில் 6 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.