தர்மபுரியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

தர்மபுரி:

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். 

துணைத்தலைவர் விஜயன், நிர்வாகிகள் சீனிவாசன், சுந்தரமூர்த்தி, ஜெகநாதன், ஜெயக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். மின்வாரிய ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும். பணப்பலன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மின் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊழியர்களுக்கு உரிய பதவி உயர்வை குறித்த காலத்தில் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com