திருவாரூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

திருவாரூர்:

திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் சகாயராஜ் தலைமை தாங்கினார். திட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன், திட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணைச்செயலாளர்கள் வைத்தியநாதன், பழனிவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தொழிற்சங்க உரிமைகளை நிலை நாட்ட வேண்டும். தொழிலாளர்கள் சட்டங்களை அமல்படுத்த வேண்டும். இந்திய பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

போராடும் தொழிற்சங்கத்தோடு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பல்வேறு தனியார் வாகன நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் திட்ட துணைத்தலைவர்கள் ராமசாமி, கண்ணன், கோட்ட செயலாளர் தமிழரசன், கோட்ட தலைவர் முரளிதரன், மன்னார்குடி கோட்ட செயலாளர் வீரபாண்டியன், திட்ட துணை செயலாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com