அறந்தாங்கி அருகே மின்சாரம் தாக்கி பெண்பலி

அறந்தாங்கி அருகே மழையின் காரணமாக வீட்டின் முன்னால் அறுந்து விழுந்து கிடந்த மின்சார வயரை மிதித்த பெண் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி பெண்பலி
மின்சாரம் தாக்கி பெண்பலி
Published on

அறந்தாங்கி:

அறந்தாங்கியை அடுத்த நீர்விளங்குளத்தைச் சேர்ந்தவர் குமார்(வயது42) விவசாயி. இவரது மனைவி சவுந்திரவள்ளி (40).இவரது மகள் இலக்கியா(8).நேற்று மாலை அறந்தாங்கி பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதேப்போல நீர்விளங்குளம் பகுதியிலும் மழை பெய்தது. அப்போது சவுந்திர வள்ளி வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். மழையின் காரணமாக வீட்டின் முன்னால் அறுந்து விழுந்து கிடந்த மின்சார வயரை மிதித்துள்ளார். 

இதில் சவுந்திரவள்ளி வீசப்பட்டார். இதைப்பார்த்த இலக்கியாவும்  தாயை காப்பாற்ற நினைத்து அவரை தொட்டபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சவுந்திரவள்ளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இலக்கியா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com