

விருதுநகர்:
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள தேவர்குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் முத்துராயப்பன். இவர் சங்கரன்கோவில் வேளாண்மைத்துறை பொறியியல் அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
நேற்று வீட்டில் செப்டிக் டேங்க் குழாயில் அடைப்பு ஏற்பட்டதை சரி செய்ய முத்துராயப்பன் முயன்றார். குழாயில் துளை போடுவதற்காக மின்சார எந்திரத்தை அவர் பயன்படுத்தினார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் முத்து ராயப்பன் மீது பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.