

மதுரை:
வடகிழக்கு பருவ மழை தொடங்குவதையொட்டி மின்விபத்துக்களை தவிர்க்க மின்வாரியம் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது.
மின் கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பியிலோ கால்நடைகளை கட்டவேண்டாம். அதில் கொடி, கயிறு கட்டி துணிகளை காயவைக்கும் செயல்களையும் தவிர்க்கவும்.
மழையின்போது மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், இழுவை கம்பிகள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம். பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய 3 மின் பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுத்திருக்க வேண்டும்.
குளியல், கழிப்பறைகளில் சுவிட்சுகள் பொருத்துவதை தவிர்க்க வேண்டும். இடி-மின்னலின்போது மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பிவேலி போன்றவையின் கீழ் நிற்கக்கூடாது. மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயை தண்ணீரை கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வெண்ணிலா தெரிவித்துள்ளார்.