வந்தவாசியில் மனைவி பிரிந்து சென்றதால் எலக்ட்ரீசியன் தற்கொலை

மனைவி பிரிந்து வாழ்வதால் எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வந்தவாசியில் மனைவி பிரிந்து சென்றதால் எலக்ட்ரீசியன் தற்கொலை
Published on

வந்தவாசி:

வந்தவாசி கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுதாகர் ( வயது 35) எலக்ட்ரீசியன். இவருக்கும் அரக்கோணத்தை சேர்ந்த தனலட்சுமி (30)என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது.

சொரூபன் (4) என்ற ஒரு மகன் உள்ளார். கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தனலட்சுமி தாய்வீடான அரக்கோணத்தில் இருந்து வருவதால் பலமுறை சுதாகர் அழைத்தும் தனலட்சுமி வந்தவாசிக்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சுதாகர் நேற்று ஆரணி சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவ்வழியாக சென்றவர்கள் பிணத்தை பார்த்து வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com