ராமநாதபுரம் அருகே மாணவிக்கு தாலி கட்டிய எலக்ட்ரீசியன் கைது

ராமநாதபுரம் அருகே பிளஸ் 1 மாணவிக்கு தாலி கட்டிய எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் அருகே மாணவிக்கு தாலி கட்டிய எலக்ட்ரீசியன் கைது
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அருகே உள்ள வண்ணாங்குண்டு பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவியும், வைரவன் கோவில் மருங்கன் வலசையைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஆனந்த் (வயது 26) என்பவரும் ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி வீட்டில் இருந்து மாயமான மாணவியை பெற்றோர் தேடி வந்தனர்.

அந்த மாணவியுடன், ஆனந்த் மருங்கன்வலசையில் இருந்தது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் மாணவி, ஆனந்த் ஆகியோரிடம் ராமநாதபுரம் மகளிர் போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் மாணவிக்கு மிரட்டல் விடுத்து ஆனந்த் தாலி கட்டியது தெரிந்தது. இதையடுத்து போஸ்கோ சட்டத்தின் கீழ் ஆனந்தை இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி கைது செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com