ஆரணி அருகே கள்ளக்காதல் ஜோடி மின்கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கள்ளக்காதல் ஜோடி மின்கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி சுதாகர், பிணமாக கிடக்கும் தேன்மொழி உடல்.
தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி சுதாகர், பிணமாக கிடக்கும் தேன்மொழி உடல்.
Published on

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அரையாளம் காலனி பகுதியை சேர்ந்தவர் பொன்னன் என்ற சுதாகர் (வயது 38). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இதே பகுதியை சேர்ந்த மூர்த்தி. பெயிண்டர். இவருடைய மனைவி தேன் என்ற தேன்மொழி (40). இவர்களுக்கு 2 மகள்கள். அதில் ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது.

மூர்த்தி வேலைக்காக அடிக்கடி வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் சுதாகருக்கும், தேன்மொழிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

இந்த நிலையில் வீட்டின் அருகே 60 அடி உயரத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மின்கோபுரத்தில் 10 அடி உயரத்தில் சுதாகர் மற்றும் தேன்மொழி ஆகியோர் தனித்தனியே இடைவெளி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கினர்.

இரு குடும்பத்தை சேர்ந்த உறவினர்களும் தகவல் அறிந்து பிணங்களை கீழே இறக்கி தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.

ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனை செய்ய உறவினர்களிடம் கேட்டனர். ஆனால் உறவினர்கள் பிணங்களை கொடுக்க மறுத்து விட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இரு பிணங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்ததாகவும், இது தொடர்பாக தகராறு ஏற்பட்டு அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதைபோல் அவர்களின் கள்ளக்காதல் விவரம் உறவினர்களுக்கு தெரியவந்ததால் தற்கொலை முடிவு எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com