தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி

தூத்துக்குடியில் மின்மோட்டார் சுவிட்சை போட்ட இளம்பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி எஸ்.எஸ். மாணிக்கபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி சக்திரேவதி (வயது24). இவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த சக்திரேவதி மின்மோட்டார் சுவிட்சை போட்டார். அப்போது அவரை எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து சுந்தர்ராஜ் வடபாகம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருமணமாகி 2 1/2 ஆண்டுகளே ஆவதால் சக்திரேவதி சாவு குறித்து கோட்டாட்சி தலைவர் பிரசாந்த் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com