ஒரத்தநாடு அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஒரத்தநாடு அருகே இன்று காலை வாகனத்துக்கு வாட்டர் சர்வீஸ் செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
ஒரத்தநாடு அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Published on

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள செம்மண்குட்டை பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 22). இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. மதுகேஷ் என்ற ஒரு வயதில் மகன் உள்ளான்.

வீரமணி அப்பகுதியில் உள்ள வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை வழக்கம் போல் வீரமணி வேலைக்கு வந்தார். அப்போது வாகனத்துக்கு வாட்டர் சர்வீஸ் செய்த போது எதிர்பாராத விதமாக வீரமணியை மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகி அவர் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் வீரமணியை மீட்டு ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி ஒரத்தநாடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com