மதுரையில் மின்சாரம் தாக்கி காவலாளி பலி

மதுரையில் தண்ணீர் மோட்டாருக்கான சுவிட்சை போடும் போது மின்சாரம் தாக்கி காவலாளி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
மதுரையில் மின்சாரம் தாக்கி காவலாளி பலி
Published on

மதுரை:

மதுரை ஐராவதநல்லூர், முனியன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கரியமுத்து (வயது 60). இவர் அந்தப்பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று அங்கு தண்ணீர் மோட்டாருக்காக சுவிட்சை அவர் இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கரியமுத்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com