மின்சாரம் தாக்கி ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி

மேட்டுப்பாளையம் அருகே மோட்டார் சுவிட்சை போட்ட போது மின்சாரம் தாக்கியதில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கி ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி
Published on

கோவை:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளிபாளையத்தை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 74). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் தனது நிலத்தில் பயிரிட்டுள்ள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சுவிட்சை போட்டார். அப்போது மின்சாரம் தாக்கி அருகே உள்ள கிணற்றுக்குள் தூக்கி வீசியது.

இதில் நிலைகுலைந்த கருப்பண்ணன் கிணற்று நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கருப்பண்ணனின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com