தர்மபுரியில் வடமாநில கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

தர்மபுரியில் பாலத்தில் இருந்து தவறி விழுந்த வடமாநில கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

தர்மபுரி:

ஒரிசா மாநிலம் பாளேஸ் பால் என்ற பகுதியை சேர்ந்த ரத்தினகார்க் மகன் அர்ஜுன் (வயது 22).  கூலித் தொழிலாளியான இவர் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். 

அப்போது பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவர் மோட்டார் மீது விழுந்ததால் மின்சாரம் தாக்கி பலியானார்.

இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com