கண்டமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

கண்டமங்கலம் அருகே பழுதான மின்விசிறியை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
கண்டமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
Published on

கண்டமங்கலம்:

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்துள்ள விநாயகம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 53), விவசாயி. இவர் தனது வீட்டில் பழுதான மின்விசிறியை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ஏழுமலை தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஏழுமலையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com