

நெல்லை:
தென்காசி அருகே உள்ள பாலமார்த்தாண்டபுரத்தை சேர்ந்தவர் செண்பகம் (வயது64). இவர் இலத்தூர் அருகே உள்ள பனையன்குளத்தில் ஒரு தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை இவர் வேலைக்கு சென்றவர் மாலை வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது தோட்டத்தில் உள்ள பம்பு செட் அறையில் மின்சார சுவிட்சை போடும் போது செண்பகம் மின்சாரம் தாக்கி கருகி பலியாகி கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து இலத்தூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். செண்பகம் மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.