ராணிப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி மாடு பலி

ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்த போது ஏற்பட்ட மின்கசிவில் சிக்கி ஒரு மாடு இறந்தது.
இறந்து கிடக்கும் மாடு.
இறந்து கிடக்கும் மாடு.
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேசன்(30). பால் வியாபாரம் செய்ரு வருகிறார். வீட்டிற்கு எதிரே மாடுகளை கட்டி வைத்திருந்தார். நேற்று ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்த போது ஏற்பட்ட மின்கசிவில் சிக்கி ஒரு மாடு இறந்தது.

அருகில் உள்ள மின்கம்பம் மோசமான நிலையில் இருப்பதால் அதனை மாற்ற வேண்டி அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com