தேர்தல் மன்னன் பத்மராஜன் 184-வது முறையாக வேட்பு மனு தாக்கல்: ஆர்.கே.நகரில் போட்டியிட விருப்பம்

தேர்தல் மன்னன் பத்மராஜன், இன்று ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இது அவரது 184-வது வேட்பு மனு ஆகும்.
தேர்தல் மன்னன் பத்மராஜன் 184-வது முறையாக வேட்பு மனு தாக்கல்: ஆர்.கே.நகரில் போட்டியிட விருப்பம்
Published on

சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் கே.பத்மராஜன். கடந்த 1986-ம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மேட்டூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட இவர், அதன்பின்னர் நடைபெற்ற பல தேர்தல்களில் அடுத்தடுத்து போட்டியிட்டு ‘தேர்தல் மன்னன்’ என்ற பட்டத்துடன் உள்ளூரில் பிரபலமானார்.

குறிப்பாக, முன்னாள் பிரதமர் வாஜ்பாயை எதிர்த்து, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ தொகுதியிலும், முன்னாள் பிரதமர் நரசிம்மராவை எதிர்த்து ஆந்திர மாநிலத்தில் உள்ள நந்தியால் தொகுதியிலும் சுயேட்சையாக போட்டியிட்டு அகில இந்திய அளவில் இவர் பிரபலமடைந்தார்.

தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ள இவர், தற்போது ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவரது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி பெற்றுக்கொண்டார். பத்மராஜன் தாக்கல் செய்யும் 184-வது வேட்பு மனு இது ஆகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com