மகாராஷ்டிரா, அரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவு

மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டசபை தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வடைந்தது.
இறுதிக்கட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி
இறுதிக்கட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு சட்டசபை தேர்தலை ஆளும் பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து சந்திக்கின்றன. அதேபோல பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கைகோர்த்து இழந்த ஆட்சியை கைப்பற்ற தேர்தல் களத்தில் மல்லுகட்டுகின்றன. 

ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதுதவிர பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி, பகுஜன் சமாஜ், ஐதராபாத் எம்.பி. ஒவைசியின் எம்.ஐ.எம். கட்சிகளும் களத்தில் உள்ளன. 

இதேபோல், 90 தொகுதிகளைக் கொண்ட அரியானாவிலும் நாளை மறுநாள் தேர்த்ல நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இரு மாநிலங்களிலும் கடந்த சில தினங்களாக மோடி, ராகுல் காந்தி, அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டசபை தேர்தலில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்று பதிவாக்கும் வாக்குகள் 24-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் அறிவிக்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com