ஒட்டன்சத்திரத்தில் ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை

ஒட்டன்சத்திரத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் ரெயில் நிலையம் அருகே 55 வயது மதிக்கத்தக்க நபர் சுற்றித் திரிந்துள்ளார். காலை 7.15 மணியளவில் சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் ரெயில் ஒட்டன்சத்திரம் வந்தது. அங்கிருந்து புறப்பட்ட போது திடீரென முதியவர் ரெயில் முன் பாய்ந்தார்.

இதில் கை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற பயணிகள் இது குறித்து பழனி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ்காரர் செந்தில் விரைந்து வந்து முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இறந்தவர் மொட்டையடித்துள்ளார். கோவிலுக்கு சென்று விட்டு ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என தெரியவில்லை.

இறந்த நபர் யார்? எந்த ஊர்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com