திருபுவனை அருகே வீட்டுக்குள் அழுகிய நிலையில் முதியவர் பிணம்

திருபுவனை அருகே வீட்டுக்குள் அழுகிய நிலையில் முதியவர் பிணம் கிடந்தது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதியவர் பிணம்
முதியவர் பிணம்
Published on

திருபுவனை:

திருபுவனை அருகே கொத்தபுரிநத்தம் சொசைட்டி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது68). மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்ட நிலையில் ராஜேந்திரன் தனியாக வசித்து வந்தார். 

இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் திருபுவனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜேந்திரன் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். 

பின்னர் உடலை கைப்பற்றி புதுவை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சப்- இன்ஸ் பெக்டர் ராஜேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com