ஆலங்குடி அருகே கிணற்றில் கிடந்த முதியவர் பிணம் மீட்பு

ஆலங்குடி அருகே கிணற்றில் முதியவர் பிணம் கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதியவர் பிணம்
முதியவர் பிணம்
Published on

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடக்கு அரையப்பட்டி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் புகழேந்தி (வயது53).இவர் சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

இந்தநிலையில் ஊருக்குள் உள்ள கிணற்றில் ஆண் பிணம் கிடப்பதாக ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையிலான மீட்புக் குழுவினர் கிணறில் இறங்கி உடலை மேலேகொண்டு வந்தனர். பின்னர் விசாரணையில் அது புகழேந்தி என்பது தெரியவந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை கைப்பற்றி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com