அண்ணன் இறந்த தகவல் கேட்டு அதிர்ச்சியில் தம்பியும் மரணம்

குடியாத்தம் அருகே அண்ணன் இறந்த துக்கம் தாளாமல் அதிர்ச்சியில் தம்பியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த அண்ணன்-தம்பி.
உயிரிழந்த அண்ணன்-தம்பி.
Published on

குடியாத்தம்:

குடியாத்தம் அருகே உள்ள சுண்ணாம்பு பேட்டை பரசுராமன் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் வரதராஜ் (வயது 61). டூவீலர் மெக்கானிக்கான இவர், கார் டிராவல்ஸூம் நடத்தினார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

வரதராஜின் தம்பி ரவி (55). கார் டிரைவர். இவருக்கு சுஜி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். வயது முதிர்ந்தாலும் வரதராஜூம் அவரது தம்பி ரவியும் ஒருவர் மீது ஒருவர் மிகவும் பாசமாக இருந்தனர்.

இந்த நிலையில், ரவி நேற்று மாலை திருப்பத்தூருக்கு கார் ஓட்டிச் சென்றார். ஏற்கனவே, உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவரது அண்ணன் வரதராஜ், அந்த நேரத்தில் திடீரென உயிர் இழந்தார். இதுகுறித்து, போன் மூலம் ரவிக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர்.

திருப்பத்தூரில் இருந்து திரும்பிய ரவி, அண்ணன் இறந்த துக்கம் தாளாமல் கதறி அழுதபடியே காரை ஓட்டியுள்ளார். இதனால், கார் ஓட்டி வரும் போதே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. காரில் பயணம் செய்தவர்கள் ரவியை மீட்டு மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

அங்கு, ரவி பரிதாபமாக உயிரிழந்தார். சாவிலும் பிரியாத அண்ணன், தம்பி உடல்கள் இன்று ஒன்றாக அடக்கம் செய்யப்படுகிறது. உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com