தஞ்சையில் அண்ணனை தாக்கிய தம்பி கைது

தஞ்சையில் அண்ணனை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை கீழவாசல் வடக்கு கொல்லை கோட்டை தெருவை சேர்ந்தவர் அன்வர்பாட்ஷா (வயது 66). இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இவரது தம்பி பசீர் அகமது (60). தஞ்சையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக இவர்களுக்கு சொந்தமான வீட்டின் பொது சுவர் இடிந்து விழுந்தது.

இதையடுத்து சுவரை சீரமைக்க வேண்டும் என்று அன்வர் பாஷா தனது தம்பி பசீர் அகமதுவிடம் கூறினார். இதில் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த பசீர் அகமது அவரது மகன் பாரிஸ் அகமது ஆகியோர் அன்வர் பாட்ஷாவை கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீசில் அன்வர் பாஷா புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பசீர் அகமது, அவரது மகன் பாரிஸ் அகமது ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com