அமர்நாத் யாத்திரை: 2513 யாத்ரீகர்கள் அடங்கிய எட்டாவது குழு பயணம்

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலமான அமர்நாத் பனி லிங்கத்தை தரிக்க 2513 யாத்ரீகர்கள் அடங்கிய எட்டாவது குழு இன்று பயணமாகியுள்ளது.
அமர்நாத் யாத்திரை: 2513 யாத்ரீகர்கள் அடங்கிய எட்டாவது குழு பயணம்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம்

செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். முதல் நாளாக 2,280 யாத்ரீகர்கள் மலையடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில், 2513 யாத்ரீகர்கள் கொண்ட எட்டாவது குழுவினர் காவெல்காட் முகாமில் இருந்து இன்று அதிகாலை 78 வாகனங்களில் புறப்பட்டு குகைக்

கோயிலுக்கு சென்றனர்.

இன்று மாலை பல்ட்டல் மலையடிவாரத்துக்கு இவர்கள் சென்றடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களையும் சேர்த்து ஜம்மு அடிவார முகாமில்

இருந்து மட்டும் 90,000 பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com