நைஜீரியா சர்ச்சில் துப்பாக்கிச் சூடு - 18 பேர் பரிதாப பலி

நைஜீரியா நாட்டில் உள்ள கத்தோலிக்க சர்ச்சில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நைஜீரியா சர்ச்சில் துப்பாக்கிச் சூடு - 18 பேர் பரிதாப பலி
Published on

மகுர்டி:

நைஜீரியா நாட்டின் தலைநகர் மகுர்டியில் உள்ள செயின்ட் இக்னேஷியஸ் கத்தோலிக்க சர்ச்சில் நேற்று பலர் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது சர்ச்சினுள் துப்பாக்கியுடன் நுழைந்த பலர் திடீரென துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தில் இரண்டு பாதிரிகள் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். 

தகவலறிந்த போலீசார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com