பாகிஸ்தான்: 40 பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 8 பிரேதங்கள் மீட்பு

பாகிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் இன்று 40 பேருடன் சென்ற படகு சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 8 பிரேதங்களை மீட்பு படையினர் கரை சேர்த்தனர்.
பாகிஸ்தான் படகு விபத்து
பாகிஸ்தான் படகு விபத்து
Published on

பாகிஸ்தான் நாட்டின் கிழக்கே பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட ஒகாரா மாவட்டத்தில் இன்று சுமார் 40 பேருடன் சட்லெஜ் ஆற்றில் சென்ற படகு திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி, கவிழ்ந்து தண்ணீருக்குள் மூழ்கியது.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு படையினர் 8 பிரேதங்களை கரை சேர்த்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com