ஈராக்: அமெரிக்கா தலைமையிலான விமானப்படை தாக்குதலில் 8 ஐ.எஸ்.பயங்கரவாதிகள் பலி

ஈராக் நாட்டின் நினேவே மாகாணத்தில் இன்று அமெரிக்கா தலைமையிலான கூட்டு விமானப்படை தாக்குதலில் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் இயக்கத்தை சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர்.
குண்டுமழை பொழியும் போர் விமானம்
குண்டுமழை பொழியும் போர் விமானம்
Published on

ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் பாலைவனப்பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

அவர்களில் சிலர் யூப்ரெட்டஸ் நதிக்கரையோரம் அமைந்துள்ள புறநகர் பகுதிகளில் பதுங்கியுள்ளனர். அங்கிருந்தவாறு அவ்வப்போது கொரில்லா போர்முறை பாணியில் அதிரடியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஈராக் நாட்டின் வடக்கில் டைக்ரிஸ் நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ள நினேவே மாகாணத்துக்கு உட்பட்ட ஹாவி அஸ்லான் என்ற தீவுப்பகுதியில் உள்ள ஐ.எஸ்.இயகத்தை சேர்ந்த சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ஈராக் உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com