அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு - 8 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் துணை ஷெரீப் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு - 8 பேர் உயிரிழப்பு
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள லிங்கன் கவுண்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. லிங்கன் கவுண்டி பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மாவட்ட முதன்மை அதிகாரியான துணை ஷெரீப் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக மிசிசிப்பி புலனாய்வு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன் விரோதம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் 35 வயதுமிக்க ஒருவனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்க நேரப்படி நேற்று இரவு இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்காக அப்பகுதி மக்கள் பிராத்தனை மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com