நீதித்துறைக்கு அவமதிப்பு: எகிப்து முன்னாள் அதிபர் உள்பட 20 பேருக்கு மூன்றாண்டு சிறை

நீதித்துறையை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் எகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது முர்சிக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் 20 லட்சம் பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறைக்கு அவமதிப்பு: எகிப்து முன்னாள் அதிபர் உள்பட 20 பேருக்கு மூன்றாண்டு சிறை
Published on

கெய்ரோ:

எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் முகமது மோர்சி(64). முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012-ம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கிவிட்டு அதிபர் பதவியைப் பிடித்த மோர்சியால் ஓராண்டுக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க முடியவில்லை. 

எகிப்தின் ராணுவத் தலைவராக இருந்த அப்டெல் சிசி என்பவர் மோர்சியை பதவியிலிருந்து இறக்கி கைது செய்து சிறையிலும் அடைத்தார். அவர்மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 

கத்தார் நாட்டுக்காக உளவு பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் 25 ஆண்டு சிறை தண்டனையும், தன்னை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கொல்லுமாறு கலவரத்தை தூண்டி விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு முஹம்மது முர்சி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நீதித்துறையை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் எகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது முர்சிக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் 20 லட்சம் பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com