எகிப்து தேவாலயத்தில் தீவிரவாதி துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி

எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் நுழைந்து தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். #Egypt #Cairochurchattack
எகிப்து தேவாலயத்தில் தீவிரவாதி துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி
Published on


கெய்ரோ:

எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் அமைந்துள்ள ஹெல்வான் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் இன்று, ஒரு தீவிரவாதி துப்பாக்கியுடன் நுழைய முயன்றுள்ளான். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் ராணுவத்தினர் அவனை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர்.

இதையடுத்து அவன், தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரிமாரியாக சுட்டுள்ளான். இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மூன்று பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய தீவிரவாதியையும் ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். 

இந்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

#Egypt #Cairochurchattack

X

Maalai Malar
www.maalaimalar.com