அறந்தாங்கி அருகே பாஜக பிரமுகர் கடை மீது முட்டை வீச்சு

அறந்தாங்கி அருகே பாஜக பிரமுகர் கடை மீது மர்ம நபர் முட்டைகளை வீசி அசிங்கப்படுத்தியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

அறந்தாங்கி:

அறந்தாங்கியை அடுத்த அரசர்குளம் மேலப்பாலம் அருகே வல்லம்பகாட்டைச் சேர்ந்தவர் பாண்டியன்(37). பால் கடை நடத்தி வரும் இவர் அறந்தாங்கி ஒன்றிய பா.ஜ.க. இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வழக்கம்போல தனது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று அதிகாலை 2 மணிக்கு கடைக்கு பால் இறக்குவதற்காக வந்தபோது, அவரது கடையின் சட்டரில் சிலர் முட்டைகளை வீசி அசிங்கப்படுத்தி இருந்தனர்.

மேலும் விளம்பர பதாகைகளையும் சேதப்படுத்தி இருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது கடை மீது முட்டை வீசி அசிங்கப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகுடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். 

புகாரின் பேரில் போலீசார், பாண்டியன் கடை மீது முட்டைகளை வீசியது யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com