

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வில் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க இராணுவ ரகசியங்கள் மற்றும் வெளியுறவுத்துறை ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிட்டார்.
இதையடுத்து, கைது செய்யப்படும் அபாயம் ஏற்பட்டதால் அமெரிக்காவை விட்டு வெளியேறினார்.அமெரிக்கா ரகசியமாக நட்பு நாடுகளை கண்கானித்த விவகாரத்தை ஸ்னோடென் வெளியிட்டதால் அமெரிக்காவுக்கு அதன் நட்பு நாடுகளிடம் இருந்து பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
ஆனால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையில், அமெரிக்காவில் இருந்து வெளியேறிய பினனர் தனது வாழ்க்கையில் சந்தித்த நிகழ்வுகளை பற்றி எட்வர்ட் ஸ்னோடென் புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகம் வரும் நாளை (17-ம் தேதி) 20 நாடுகளில் வெளியாகிறது.