

சென்னை:
பொறியியல் படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெறாத மாணவரகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
2010-ம் ஆண்டு வரை பொறியியல் படித்து தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பொறியியல் படித்து தேர்ச்சி பெறாதவர்களுக்காக அடுத்த ஆண்டு சிறப்பு தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2018-ம் ஆண்டின் பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் சிறப்பு தேர்வுகள் நடைபெறும்.
எனவே, 2010-ம் ஆண்டு வரை பொறியியல் படித்து தேர்ச்சி பெறாத மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.