பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவு

கார்பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணையிலிருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவு
Published on

திருநெல்வேலி:

கார்பருவ சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் தாமிரபரணி ஆற்றில் நீர் திறந்துவிடப்படும்.

இந்தாண்டு கார்பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணையிலிருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி ஜூன் 24-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி 120 நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அம்பாசமுத்திரம், நாங்குனேரி உள்ளிட்ட பகுதிகளில் 20,729 ஏக்கர் நிலம் பயன்பெரும். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com