முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாகனம் பின்னால் அணிவகுத்துச் சென்ற கார்கள் மோதி விபத்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்ற வாகனம் பின்னால் அணிவகுத்துச் சென்ற கார்கள் மோதி விபத்துக்குள்ளானதால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
கார் விபத்து
கார் விபத்து
Published on

மறைந்த பி.எச். பாண்டியனின் சொந்த ஊரான சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் அவரது நினைவாக 20 சென்ட் பரப்பளவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது திருவுருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபம் மற்றும் சிலையை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைக்க சென்றார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி வாகனத்தை தொடர்ந்து அதிமுக பிரமுகர்கள் வாகனத்தில் அணிவகுத்து சென்றனர். அப்போது வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்போது முன்னால் சென்ற கார் மீது மற்றொரு கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரின் முன்பக்கம் சேதமானது.

உடனே போலீசார் அந்த வாகனத்தை சாலையில் இருந்து நகர்த்தி மற்ற வாகனம் செல்வதற்கு வழிவிட்டனர். இந்த சம்பவத்தல் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com