பண மோசடி வழக்கில் மெகபூபாவின் தாயாருக்கு சம்மன்

1970-ம் ஆண்டு நடந்த பண மோசடியில் தொடர்பு இருப்பதாக விசாரணைக்காக மத்திய அமலாக்கத்துறை நிறுவனத்தில் ஆஜராகும்படி குல்ஷன் நாஷிருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
மெகபூபா
மெகபூபா
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தியின் தாயாரை, ஒரு பண மோசடி வழக்கில் விசாரிப்பதற்காக வரும் 14-ந்தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. மெகபூபாவின் தாயாரும், முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீதின் மனைவியுமான குல்ஷன் நாஷிருக்கு, 1970-ம் ஆண்டு நடந்த பண மோசடியில் தொடர்பு இருப்பதாக விசாரணைக்காக மத்திய அமலாக்கத்துறை நிறுவனத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மெகபூபா ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார். தொகுதிகளை மறுசீரமைக்கும் கமிட்டியை புறக்கணிக்க முடிவு செய்த நாளில் எனது தாயாருக்கு சம்மன் வந்துள்ளது ஆச்சரியமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“அறியப்படாத குற்றச்சாட்டுகளுக்கு நேரில் ஆஜராகுமாறு என் அம்மாவுக்கு அமலாக்கத்துறை ஒரு சம்மன் அனுப்பியது. அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதற்கான முயற்சிகளில், பா.ஜ.க. அரசு மூத்த குடிமக்களைக் கூட விட்டு வைக்கவில்லை.” என்று டுவிட்டரில் மெகபூபா பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com